பார்த்துப் பேச வந்தேன்!

     சும்மா, உங்களைப் பார்த்துப் பேச வந்தேன். பூமியின் எந்த மூலையில் இருந்தாலும் நமது முகப்பரிச்சயத்திற்கும் அகப்பரிச்சயத்திற்கும் வலைத்தள விஞ்ஞானம் இன்று வழி திறந்திருக்கிறது.

       “ கண்டுபிடிப்பல்ல விஞ்ஞானம்

        கண்டு கொள்வதே விஞ்ஞானம்

        கண்டங்கள் ஐந்தையுமே – ஒரு

        கைவிரல் ஆக்கிடுமே!

        விஞ்ஞானம்! விஞ்ஞானம்! விஞ்ஞானம்! “

     என்று ஒரு பாடல்கூட எழுதியுள்ளேன். அண்டத்தின் குணம் பிண்டத்தில் தெரியும் என்பது நமது மரபு. எல்லாவறைறையுமே ஆராய்ந்து நமது முடிவுக்கே வருவது ஐரோப்பிய மரபு.

     நமது முன்னோர்க்கெல்லாம் கிடைக்காத உன்னதம் நமக்குக் கிடைத்திருக்கிறது. எனினும் அவர்கள் உன்னதம் குறைந்தோர் ஆகிவிடுவரோ?

     Purple Rain Media Solutions நிறுவனர் திரு.பிரபாகர் வலைத்தள ஊடகத்தில் என்னை வலம்வர வைத்திருக்கிறார். இதன் மூலம் என்னோடு பேசிக்கொண்டிருக்கிற – பேசவிருக்கிற உங்கள் அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி!

     மானுடப் பண்பாட்டு கலைத்தள அற்புதங்கள் எல்லாம் வலைத்தளம் வரட்டும்! சாந்தி! சாந்தி! சாந்தி!