புத்தகங்கள்

பரிணாமன் கவிதைகள்
முதல் பதிப்பு : டிசம்பர்  2001

1974- இல் டிசம்பரில் "ஆகச்டும்- அக்டோபரும்" என்ற தனது  முதல் கவிதை நூல் வெளிவந்தது. அதன் பிறகு 1981 - ம் ஆண்டு " நெஞ்சிலாடும் கதிரும் நிஜம் விளையாத பூமியும்" என்ற எனது இரண்டாவது கவிதை நூல் மார்க்சியப் பெருந்தகை தோழர் ஆர்.கே.கண்ணன் அவர்களின் முன்னுரையுடன் வெளிவந்தது.

அவ்விரண்டு நூல்கலில்லிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட  கவிதைகளையும், அதன் பின் நான் எழுதிய நூலவடிவம் பெறாத கவிதைகளையும் ஒருங்கிசைத்து 'பரிணாமன் கவிதைகள்' என்று ஒரே நூலாக இப்போது உங்களுக்கு வழங்க்குவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் .      

ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
7, போயஸ் சாலை, எம். எம். தோட்டம்,
தேனாம்பேட்டை, சென்னை 00018.
தொலைபேசி: 4335513

உதிப்பது இல்லை மரிப்பதும் இல்லை
முதல் பதிப்பு : ஆகஸ்ட்  2013

இந்தியச் சிந்தனை மரபை உள்வாங்கி அதனைப் புதுப்பிக்க முனையும் உள்ளடக்கமும் தமிழ்க் கவிதை மரபை உள்வாங்கி அதனை அழகுற வெளிப்படித்திய ஆக்கத் திறனும் இத்தொகுப்பிற்குப் பெரும் வரவேற்பைப பெற்றுத் தரும்.

இந்தத்  தொகுப்பில் இடம் பெற்றுள்ள பல பாடல்கள் அவரால் மெட்டமைக்கப்பட்டுப் பல மேடைகளில் பாடப்பட்டுப் பல்லாயிரக்கணக்கான  மக்களிடம் சிந்தனைக் கிளர்ச்சியையும் உள்ளக் கிளர்ச்சியையும்  ஏற்படுத்திய சிறப்பைப் பெற்றவை.

தான் இயற்றிய பாடலுக்கு அதன் உயிர்த்தன்மை ஒலிக்கும் வண்ணம் மெட்டிட்டுப் பாடும்  திறன் உடையவர் என்பதால் இவர் பாரதி, ஜீவா, கே.சி.எஸ். என்ற வரிசையில் வைத்துக் கருதத் தக்கவராகிரார்.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்..
41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர் , சென்னை - 600 098
தொலைபேசி: 26251968, 26359906

 என் பெயர் இந்தியா
முதல் பதிப்பு : டிசம்பர் 2011

நமது சுய வாழ்க்கையிலும்,இந்தியப் பொது வாழ்க்கையிலும் வியக்கத்தக்க வளர்ச்சியும், மாற்றமும், முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளதை என்னைப் போன்றே நீங்களும் அறிவீர்கள்.

நாட்டில் வளர்ச்சி இன்மையிலும் பிரச்சனைகள் , வளர்ச்சியினாலும் பிரச்சினைகள் வருவதை இலக்கியப் படைப்பாளிகள் நன்கு அறிவர்.

எத்தகைய பிரச்சினைகளே ஆனாலும் அவற்றை எதிர்  கொண்டு வளர்ச்சியைத் தடையின்றித் தொடர வேண்டும் என்பதே ஆக்கப்பூர்வமான இந்தியக் கலைஞர்களின் அவாவாகும்.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்..
41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர் , சென்னை - 600 098
தொலைபேசி: 26251968, 26359906